Sunday, January 23, 2011

கவிதை

எனக்குள் நான்

எழுதாமல் விட்டதைவிட
எழுதி - விட்டவையே
ஏராளம்! ஏராளம்! - ஆம்
ஏட்டில் ஏற்றாமல்
விட்டு விட்டேன்
விற்று இருக்கலாமோ?
வினா எழுப்பும் மனது!
விடை பகர்வதில்லை.
எனக்குள் சில நேரம்
எனக்காகவும்
மவுனிக்கிறேன்!
-----------சங்கை ஒளி மகன்

Saturday, January 22, 2011

நம்பாதே........!

மலர்கள் அத்தனையும்
வெளியே மவுனமாய்! ஆனால்...
அதன் மொழிகற்றவ்ர்கள்
மட்டுமே அறிவார்கள் -ஆம்!
ரோசாப் பூக்களின்
உள்முகங்களிலும் முட்கள்!


----------ச்ங்கை ஒளி மகன்
இல்லாமையின் வல்லமை........
இளமைகளில்தான்
இன்பங்கள் வருகின்றன!
எல்லாமும் இருந்து
”இல்லாமையும்” வந்தால்...
சுகங்களும் அந்நேரம்
சோகங்களாய் சுருங்கிவிடுகின்றதே!

வாழ்வென்னும் வீட்டில்
வறுமையும் விருந்தாளிதான்!
வறும்போது சொல்லிவிட்டு வந்தால்
இளமைக்கு எழுதியனுப்பலாம் - எனக்கு
வாலிபம் தேவையில்லை என்று...!


___________சங்கை ஒளி மகன்